10 ஆயிரம் ரூபா அதிகரிப்புடன் அரச ஊழியர்களுக்கு 10 ஆம் திகதி சம்பளம்!

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத ஓய்வூதிய சம்பளக் கொடுப்பனவும் எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சம்பளப் பிரச்சினையை முன்வைத்து கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.

Related Articles

Latest Articles