நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் மதியம் 2 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும்.
அத்துடன், நுவரெலியா, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி உட்பட 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது .