புதையல் தோண்டிய எட்டு பேர் கைது!

மஹியங்கனை சொரபொர பகுதியில் புதையல் தோண்டிய 08 பேரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூஜை பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்த சந்தேக நபர்களை நேற்றைய தினம் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 4 ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 50, 45, 37, 38 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் அவர்களில் நால்வர் மஹியங்கனை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ஏனையவர்கள் கொட்டாவ, காலி, நெலுவ மற்றும் எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சொரபொர பாடசாலை ஒன்றுக்கு பின்புறம் உள்ள காணியில் புதையல் தோண்டுவதாக குற்ற தடுப்பு பிரிவின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போசா ஜயசேகரவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.எஸ்.பி.பலிபான மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோபா டபிள்யூ.டபிள்யூ.எம்.விஜேரத்ன, குற்ற தடுப்பு பிரிவுவின் பொறுப்பதிகாரி போசா ஜயசேகர (8165) போகோ பிரேமரத்ன (81362), போகோ சம்பத் (71531), போகோ துமிந்த (82939), போகோ குலவம்ச (104331) ஆகியோர் கபோகோ மலிகா (9121) ஆகியோருடன் இணைந்து குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

ராமு தனராஜா

Related Articles

Latest Articles