அதிரடியா? ஆட்டமிழப்பா?

“ தற்போதைய அரசியல் கள சூழ்நிலையில் எவ்வாறு அடித்தாடுவது என்பது குறித்து ரணிலிடம் தெரிவித்துவிட்டேன், எனவே, அடித்தாடுவதா தவறான முடிவெடுத்து ஆட்டமிழப்பதா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜுன் 15 ஆம் திகதிக்கு பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது எனவும், ஜனாதிபதி மற்றும் பஸில் ராஜபக்சவுக்கிடையில் இது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது எனவும் ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க விடுத்துள்ள அறிவிப்பு மொட்டு கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மொட்டு கட்சியின் எம்.பிக்கள் சிலர் பஸில் ராஜபக்சவை சென்று சந்தித்து, இது தொடர்பில் வினவியுள்ளனர்,

“ சேர், நாடாளுமன்ற தேர்தல் முதலில் நடக்குமென்றால் எங்களுக்கும் சொல்லி விடுங்கள். வேலையை ஆரம்பிக்க வேண்டும்.” எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

“ எனக்கு அது பற்றி தெரியாது, சிலவேளை ரணிலின் தகவலை உதயங்க வெளியிட்டிருக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் அரசியல் களத்தில் எவ்வாறு ஆட வேண்டும் என்பது பற்றி ரணிலுக்கு விளக்கிவிட்டேன், இனி முடிவெடுக்கும் அதிகாரம் அவரிடம்தான் உள்ளது.”- என பஸில் குறித்த உறுப்பினர்களுக்கு பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு பஸில் ராஜபக்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles