சிறுவனை கொடூரமாக தாக்கியவர் கைது: இரு பெண்களும் சிக்கினர்

சிறுவன் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.வெலி ஓயா பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து தாக்குதல் நடத்தியவரும், ஏனைய இருவரும் தலைமறைவாகினர்.

தாக்குதல் நடத்தியவர் மற்றும் அவருடன் வாழ்ந்தனர் எனக் கூறப்படும் இரு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Related Articles

Latest Articles