ஊவா மாகாண சமூக சேவைகள் அமைச்சுக்கு 106 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

ஊவா மாகாண சபையின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் அமைச்சிற்கு நடப்பு 2026 ஆண்டிற்காக 106 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண சபையின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள நிதி சமூக சேவைகள் அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட 10 விடயங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

இதன்படி முதியோர், விசேட தேவையுடையவர்கள், நீண்ட நாள் நோய் தொற்றுகளுக்கு உள்ளானவர்களின் வீடுகள் திருத்தம், மலசலகூடம் வசதிகள், பாதை வசதி என்பவற்றை மேற்கொள்ளல், விசேட தேவையுடையவர்களுக்கான வீடமைப்பு உதவி வழங்கல், பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கல், சுயதொழில் பயிற்சி வழங்கல், முதியோர் இல்லம், விசேட தேவையுடையவர்களுக்கான இல்லங்களில் உள்ளவர்களை பராமரித்தல் , பராமரிப்பாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கல், விசேட தேவையுடைய சிறுவர்களின் உள, உடல் விருத்திக்காக விசேட நிகழ்வுகளை நடத்துதல்,

உள்ளூராட்சி மன்றங்கள் மட்டத்தில் புத்தாண்டு விழாக்கள், ஆயுர்வேத மருத்துவ முகாம்கள், சமய நிகழ்வுகள் என்பவற்றை நடத்துதல், விசேட தேவையுடையவர்களுக்கு பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் உடல், உள விருத்திக்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் போதை பொருள் தடுப்பு தொடர்பான மக்கள் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை மாகாணத்தில் முன்னெடுத்தல் போன்ற திட்டங்கள் இந்நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அச்செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பசறை நிருபர்

Related Articles

Latest Articles