நாட்டின் தற்போதைய பொருளாதார அரசியல் நிலை தொடர்பில் அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயை நேற்றுமாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை இந்தியா தொடர்ச்சியாக வழங்கும் எனத் தூதுவர் இதன்போது கூறினார் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் ருவிட்டரில் பதிவிட்டுள்ளது.
நெருக்கடியான நிலையில் இலங்கையுடன் தொடர்ச்சியாகக் கைகோர்த்துள்ளமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மக்களுக்கு இதன்போது நன்றி தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீனக் குழு, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மேற்படி சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கான சீனத் தூதுவரும் அண்மையில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
