11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிபர் கைது

பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

Latest Articles