11 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார போர் ஓய்வு!

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவுடன் பிரசாரக் காலம் நிறைவடைகின்றது.

இந்நிலையில், திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடையும் நேரம் வரை மௌன காலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, தேர்தல் சட்டத்தை மீறும் எந்தவொரு நபரையும் கைது செய்யப் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles