60 வயது நிறைவடைந்ததையடுத்து, 11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இன்று (31) ஓய்வுபெற உள்ளனர்.
இதன்படி இரண்டு சிரேஷ்ட டிஐஜிக்களும் ஒன்பது டிஐஜிக்களும் ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சிறிலங்கா காவல்துறை நிர்வாகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க மற்றும் ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூஎப்யூ பெர்னாண்டோ ஆகியோர் இன்று ஓய்வுபெற உள்ளனர்.
மேலும், ஜனாதிபதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அகஸ்டஸ் பெரேரா, வன்னி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன அழககோன், வடக்கு மாவட்ட இமுவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் விஜித குணரத்ன, சமூக பொலிஸ் மற்றும் பாதுகாப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஜகத் பலிஹக்கார ஆகியோர் ஓய்வு பெற உள்ளனர்.
கேகாலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன, பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலால் அபோன்சு, களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.டி.எஸ்.பி சந்தநாயக்க, நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.எஸ்.என் பீரிஸ் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரஷாந்த ஜயகொடி மேற்கு வடக்கு குற்றப்பிரிவு பொறுப்பாளரும் ஓய்வு பெற உள்ளார்.










