100இற்கும் அதிகமான சீன செயலிகள் உட்பட 118 மொபைல் செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. இதில் PUBG என்ற மொபைல் விளையாட்டு செயலியும் அடங்கும்.
இந்திய சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இராணுவ மோதல் இந்திய – சீன உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இதனை மையப்படுத்தி 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசாங்கம், அண்மையில் தடை விதித்திருந்தது. தொடர்ந்தும் லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், 118 செயலிகளுக்கு இந்தியா அதிரடி தடை விதித்துள்ளது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைக்கும் என்ற அடிப்படையில் குறித்த செயலிகளைத் தடைசெய்வதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியா தடைசெய்துள்ள செயலிகளின் முழுமையான விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.