முன்னாள் எம்.பி. திலீபன் இந்தியாவில் கைது!

ஈபிடிபி கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டவேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவின் கொச்சி பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles