12 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது

மஹியங்கனை, அரவத்தை பிரதேசத்தில் 12 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த  சம்பவம் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர் மஹியங்கனை, ஒருபெந்திவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09 இல் கல்வி கற்கும் மாணவன் என்பதுடன், பாதிக்கப்பட்ட சிறுமி அதே பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 07 இல் கல்வி பயிலும் மாணவி ஆவார்.

சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அயலவர் எனவும், அவர் வீட்டில் தனியாக இருந்த போது அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஹியங்கனை பொலிஸாரால் 14 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles