12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி ஏற்றும் காலப்பகுதி அறிவிப்பு

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை இம்மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நேற்று (11) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

முதலாவது கட்டத்தில் 35,000 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

50-இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளை திறப்பதற்கும் நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த தீர்மானங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles