12 ஆசனங்களுக்காக கண்டி மாவட்டத்தில் 510 பேர் போட்டி

கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்களுக்காக 510 பேர் போட்டியிடுகின்றனர்.
22 அரசியல் கட்சிகளில் இருந்தும், 12 சுயேச்சைக் குழுக்களில் இருந்துமே மேற்படி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் முன்னாள் எம்.பிக்களான கெஹலிய ரம்புக்வெல்ல, லக்ஸ்மன்கிரியல்ல, லொஹான் ரத்வத்த மற்றும் குணதிலக ராஜபக்ச ஆகியோர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

மஹிந்தானந்த, வேலுகுமார், அநுராத ஜயரத்ன உட்பட முன்னாள் எம்.பிக்களாக இருந்த எட்டுபேர் இம்முறையும் போட்டியிடுகின்றனர்.

இதொகாவின் சார்பில் பாலகிருஸ்ணன் பிரசாத்குமார் இம்முறை கண்டி மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் கூட்டணியில் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles