” தலதாமாளிகைமீது தாக்குதல் நடத்தியதற்காக ஜே.வி.பியினர் மன்னிப்பு கோர வேண்டும்.” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஸ்ரீ தலதா வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை சிறந்த நடவடிக்கை. அதற்காக அரசாங்கத்தை பாராட்டுகின்றோம். இதனை முதற்கட்ட நடவடிக்கையாக கருதுகின்றேன்.
அதேபோல 2 ஆம் கட்டமாக 1989 இல் தலதாமாளிகைமீது தாக்குதல் நடத்தியதற்காக மன்னிப்பு கோர வேண்டும். அப்போது அனைவரும் இணைந்து மேலும் பாராட்ட முடியும்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள், தற்போது புத்தம் சரணம் கச்சாமி எனக் கூறுவதற்கு வகுப்பெடுத்துவருகின்றனர். வெட்கப்படாமல் தற்போதாவது அது பற்றி படிப்பது பாராட்ட வேண்டிய விடயம்.
ஜய மங்கள கீதை இசைப்பதற்கும் பயிற்சி பெறுகின்றனர். இனி நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகளின்போது ஜய மங்கள கீதத்தை எம்.பி.பி. எம்.பிக்களே இசைக்கக்கூடும். அதன்மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்.
அதேவேளை, சீனாவுக்கு அடுத்தப்படியாக பலம்பொருந்திய அரசாங்கம் எமது நாட்டில்தான் உள்ளதுபோலும். ட்ரம்புக்கு கடிதம் எழுதியவுடன் 90 நாட்கள் வரி விதிப்பு நிறுத்திவைக்கப்பட்டுவிட்டதாம்.