தேசிய கட்சியில் தசி கணேஷனுக்கு உயர் பதவி!
சர்வஜன அதிகாரம் கட்சியின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தசி கணேஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அக்கட்சிக்கு கொத்மலை பிரதேச சபைக்கு கிடைக்கப்பட்ட ஆசனத்துக்கு தசி கணேஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியில் தமது அரசியல் செயற்பாடுகளை தசி கணேஷன் தீவிரமாக முன்னெடுத்துவந்தார்.
கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மடக்கும்பர மண்ணில் போட்டியிட்டதுடன், நுவரெலியா மாவட்டத்திலேயே சர்வஜன அதிகாரம் கட்சியில் அதிக வாக்குகளை பெற்றவராக உருவானார். அதனால் அக்கட்சி கொத்மலை பிரதேச சபையில் பெற்றுக்கொண்ட ஒரு ஆசனத்தை அவருக்கே வழங்கியது.
தசி கணேஷனின் அயராத அரசியல் பணியை அங்கீகரிக்க அவருக்கு அக்கட்சியின் மிக உயரிய பதவியொன்று தற்போது வழங்கப்பட்டுள்ளது. சர்வஜன அதிகாரம் கட்சியின் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மிக இளம் வயதில தேசிய கட்சியொன்றில் அரசியலில் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அத்துடன், மலையக இளைஞர்கள் அவருடன் இணைந்து பயணிக்க முன்வந்துள்ளனர்.