13 ஐ முழுமையாக அமுலாக்க சஜித் பச்சைக்கொடி!

“புதிய அரசமைப்பு இயற்றப்படும்வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன், அரசமைப்பின் பிரகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக மீளப்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.”

-ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசு ஆதரவுடன் மக்கள் தொகை மாற்றங்கள் செய்யப்படாத கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் எனவும், பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்கப்படும் எனவும் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டது.

வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், அனைத்துப் பிரஜைகளையும் வலுப்படுத்தல், அரச துறையை மேம்படுத்தல், வாழ்க்கைத் தரத்தை பாதுகாத்தல், தேசிய பாதுகாப்பு என பல தலைப்புகளின்கீழ் உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல் எனும் தலைப்பின்கீழ் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் வருமாறு,

இலங்கையின் தற்போதைய அரசமைப்பின்கீழ் தேவையான முறையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம். பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும்போது அனைத்து நிறுவனங்களிலும் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு சட்டத்தை உருவாக்குவோம்.

மதத் தலைவர்கள், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து முறையாக கருத்துக்களைப் பெற்று, தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி அர்ப்பணிப்புடன் உள்ளது.

இந்த செயல்முறையில், எமது கொள்கை என்னவென்றால் தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13வது அரசமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய நாடாளுமன்ற முறைமைக்கு மாற்றுவதாகும்.

முடிவெடுக்கும் செயல்முறையில் குடிமக்களை செயலில் கிராம அரசு மற்றும் நகர அரசு எனப்படும் சமூக அடிப்படையிலான ஜனநாயக நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதிப்பூண்டுள்ளது.

அரசமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதுடன், மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்  பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும், மேலும் அதிகபட்ச நிதி திறன்  மற்றும் செயல்திறனுடன் மாகாண சபைகள் செயல்படுவதை உறுதிசெய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம்,

காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு, அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம்.

பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்கப்படும்.
அரசு ஆதரவுடன் மக்கள் தொகை மாற்றங்கள் செய்யப்படாத கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.

மேலும், மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக முதலீடு செய்வதற்கு விசேட சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படும்.

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், சமூக மேம்பாட்டுப் பணிகள் மற்றும் நிலைபெறுதகு பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கட்டமைக்கவும், அபிவிருத்தி செய்யவும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிசெய்வதற்கு ஒரு சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டை ஏற்பாடு செய்வோம்.

சட்டவிரோதமாக ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல்களை விரைவாக நடத்த தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுத்தல்.

நீதித்துறை நிர்வாகத்தில் நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டைத் தடுக்க சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதுடன், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் செயல்திறனை நிறுவ தேவையான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles