அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
இரா. சம்பந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது எமது அரசமைப்பில் உள்ள ஒரு விடயமாகும். உயர்நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த தேவையான ஏற்பாடுகள் இடம்பெறவேண்டும்.
13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுலாக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, எனவே, 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவது குறித்து நாட்டு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி தீர்மானம் எடுக்க வேண்டும்.
சம்பந்தன் ஜனநாயக வழியில் செயற்பட்டவர். வன்முறையை எதிர்த்தவர் சிறந்த சட்டத்தரணி.” –என்றார்.
