13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து சஜித் வழங்கியுள்ள உறுதிமொழி!

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு, சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடி,முடி கண்டறியப்படும். இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

பொறுப்புகூறவேண்டியவர்களுக்கும் உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். இந்நாட்டில் கொலைக்கலாசாரம், இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், பயங்கரவாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு அரசியல் பிரச்சினைகளுக்கு குறிப்பாக சிங்களம் அல்லாத மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்போம். 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.” – எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles