13 தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன? விளக்குகிறார் பிரசன்ன!

” பொலிஸ், காணி அதிகாரங்களைத்தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் நிலைப்பாடாகும்.”

இவ்வாறு அமைச்சரும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தால்தான் என்னால் முதலமைச்சராக செயற்பட முடிந்தது. மாகாணசபைகளுக்கு நிர்வாக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.கொழும்பில் கல்வி அமைச்சராக செயற்படுவதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.” – எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles