இலங்கையில் களமிறங்கியது இந்திய அணி: பாகிஸ்தானுடன் நாளை மோதல்!

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோதல் நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளது.

உலக கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இந்த மாபெரும் போட்டியின் மீது திரும்பியுள்ளது.

இந்த பரபரப்பான ‘கிரிக்கெட் போர்’ கொழும்பிலுள்ள ஆர். பிரேமதாச மைதானம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

இந்த போட்டியில் பங்கேற்கமாட்டோம் என முன்பு பாகிஸ்தான் அறிவித்திருந்தது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இலங்கை மேற்கொண்ட தீவிர இராஜதந்திர முயற்சிகளின் பின்னர், பாகிஸ்தான் அணி இறுதியில் சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்தியா–பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான அரசியல் பதற்றம் காரணமாக, இரு அணிகளின் மோதல் எப்போதும் சாதாரண போட்டியாக இல்லாமல், ஒரு பெரும் கௌரவப் போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. மைதானத்தில் ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு ஓட்டமும் ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கப்போகிறது.

நாளைய மோதல் வெறும் கிரிக்கெட் போட்டி அல்ல — அது பெருமை, மரியாதை, ஆதிக்கம் ஆகியவற்றை நிரூபிக்கும் மாபெரும் போராட்டமாக அமையவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Related Articles

Latest Articles