மலையகத்தில் ஆரோக்கியமான அரசியல் மாற்றம் அவசியம்: இணைந்து பயணிப்போம் வாருங்கள்!

“மலையக மக்களுக்கான அபிவிருத்தியில் ஒரே பாதையில் பயணிப்பதற்கு மலையக அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும். ஒருவரையொருவர் குறைகூறிக்கொள்வது நிறுத்தப்பட வேண்டும்.
மலையகத்தில் ஆரோக்கியமான அரசியல் மாற்றம் அவசியம்.”

இவ்வாறு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

சூரியன் விழுதுகள் அரசியல் நிகழ்ச்சியின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ மக்களின் அபிவிருத்தி தொடர்பில் ஒன்றாக பயணிப்போம் என மலையக அரசியல் தலைவர்களுக்கு நாம் அழைப்பு விடுத்திருந்தோம்.

ஏனைய சமூகத்திpனர் பொருளாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தியில் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.
மலையக அரசியல்வாதிகள்மீது எமக்கு தனிப்பட்ட கோபம் கிடையாது. காழ்புணர்ச்சியும் கிடையாது.

எனவே, ஒருவரையொருவர் குற்றச்சாட்டுவதை விடுத்து மக்களுக்கான அபிவிருத்தியில் ஒரு பாதையில் பயணிப்போம். ஏனெனில் மக்கள்தான் கடையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பார்கள். மக்களின் முன்னேற்றம்தான் எமக்கு முக்கியம்.

எதிரணியில் இருந்து எமக்கு ஆலோசனை வழங்கலாம். நாம் எதிரும், புதிரும் ஆனவர்கள் அல்லர். நட்புடன் பயணிக்கலாம். ஆரோக்கியமான அரசியல் மாற்றம் அவசியம்.” எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles