ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டி புதிய கூட்டணியால் நடத்தப்படும் மூன்றாவது மக்கள் கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி பதுளையில் நடைபெறவுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் ஆகியோரின் ஏற்பாட்டிலேயே இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
புதிய கூட்டணியின் முதலாவது கூட்டம் அம்பாந்தோட்டையிலும், இரண்டாவது கூட்டம் மொனறாகலையிலும் நடைபெற்றது.
இந்நிலையிலேயே மூன்றாவது கூட்டம் பதுளையில் இடம்பெறவுள்ளது.