இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்கா அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.
இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடும்போது பயங்கரவாதிகள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தினர். இதில் சில வீரர்கள் காயம் அடைந்தனர். அதில் இருந்து பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தது.
தற்போது வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளன. தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இன்று பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.
இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா அணி கடந்த 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்தது. அதன்பின் தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கராச்சியில் ஜனவரி 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலும், 2-வது டெஸ்ட் ராவல் பிண்டியில் பெப்ரவரி 4-ஆம் திகதியில் இருந்து 8 ஆம் திகதி வரையிலும் நடக்கிறது. டி20 கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
தென்ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரசு அமீரகத்தில் 2010 மற்றும் 2013-ல் சுற்றுப் பயணம் செய்து விளையாடியுள்ளது.