14 ஏக்கர் காணியில் புதிய பொலிஸ் தலைமையகம் – அமைச்சரவை அனுமதி

பொலிஸ் தலைமையகத்தில் புதியதொரு இடத்தில் நிர்மாணிப்பதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி தற்போது கொழும்பு 1 இல் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகம், பெபிலியான பகுதிக்கு மாற்றப்படவுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் வருமாறு,

” கொழும்பில் தற்போது பொலிஸ் தலைமையகம் யோர்க் வீதியும் விகாரை வீதியும் தொடர்புபடும் வீதிக்கு இடையில் 100 வருடங்களுக்கு அதிகமான பழைய 03 கட்டிடங்களில் இயங்கி வருவதுடன், குறித்த கட்டிடத்தொகுதியில் போதியளவு இடவசதியின்மையால் சிவில் நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.

பொலிஸ் தலைமையகக் கட்டிடத் தொகுதியை மிரிஹான பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்காக 2012 யூலை மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலைமையில் இலங்கை பொலிசுக்குச் சொந்தமான பெப்பிலியான பிரதான வீதியில் இலக்கம் 142, பெல்லன்தொட்ட சந்தி, அத்திடிய வீதி, தெஹிவல எனும் முகவரியில் அமைந்துள்ள 14 ஏக்கர் 02 ரூட் 38.50 பேர்ச்சஸ் காணியில் பொலிஸ் தலைமையகத்தை நிர்மாணித்தல் மிகவும் பொருத்தமென அடையாளங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொலிஸ் தலைமையக கட்டிடத்தொகுதி மிரிஹான பிரதேசத்தில் அல்லாமல், இலங்கை பொலிசுக்குச் சொந்தமான குறித்த காணியில் நிர்மாணிப்பதற்கும், தேவைக்கேற்ற வகையில் வேறு வேறாக கட்டிடங்களின் கட்டுமானக் கருத்திட்டங்களுக்கான பெறுகை செயன்முறையை மேற்கொள்வதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்   சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles