14,285 பேருக்கு கொரோனா – 8,880 பேர் குணமடைவு – 36 பேர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 10 ஆயிரத்து 807 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 356 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் (866) கடந்த 23 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டனர். ஒரே நாளில் அதிகளவானவர்கள் (765) நேற்று (5) குணமடைந்தனர்.

மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 41 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் ஆயிரத்து 7 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. ஏனைய 8ஆயிரத்து 759 பேரும் இவர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர்.
மினுவாங்கொட கொத்தணிமூலம் வைரஸ் தொற்றியவர்களில் இதுவரை 2 ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் நேற்று மாத்திரம் 7ஆயிரத்து 968 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 6 லட்சத்து 10 ஆயிரத்து 836 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 8 ஆயிரத்து 880 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 370 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles