15 வயது சிறுமிமீது பாலியல் வன்புணர்வு – பொகவந்தலாவையில் கொடூரம்

15 வயதான பாடசாலை மாணவியைக் கர்ப்பமாக்கிய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (21) கைதுசெய்யப்பட்ட இச்சந்தேகநபர் நாவலப்பிட்டி, தொலஸ்பாகை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் மனைவி பொகவந்தலாவை, கெம்பியன் தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், மனைவியின் வீட்டுக்கு வந்த போதே, சந்தேகநபரால் மாணவி, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி ஆறு மாத கர்ப்பிணி என்றும், அவரது நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த குடும்பல நல உத்தியோகத்தர் ஒருவர், மாணவியை பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்தபோதே, மாணவி கர்ப்பம் அடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles