16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் நான்கு வெளிநாட்டவர்கள் கைது

குஷ் எனப்படும் 16 கிலோ கிராம் போதைப்பொருளை வைத்திருந்த நான்கு வெளிநாட்டு பிரஜைகள் ஹபராதுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று இடங்களில் இருந்து ஹபராதுவ காவற்துறையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களினால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

21 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles