16 நாட்களுக்குள் 3,637 பேருக்கு டெங்கு – 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவற்றில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் இதுவரை 3,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related Articles

Latest Articles