17 ஆம் திகதியே ‘சேவல்’ உத்தியோகப்பூர்வமாக கூவுமாம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது என காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிபுணர் குழு தற்போதைய கள சூழ்நிலையை முழுமையாக ஆராய்ந்து வருகின்றது.

மேலும் பல தேசிய கட்சிகள் தமது கூட்டணி சின்னத்தில் இ.தொ.காவுடன் இணைந்து மலையகத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன.

இறுதி முடிவு மக்களின் விருப்பதிற்கேற்பவும், நம் சமுதாயத்திற்கும் நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் எடுக்க்கப்படும்.” – எனவும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இதொகா சேவல் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பிரதித் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குறிப்பிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles