நெதர்லாந்து வசமிருந்த இலங்கையின் தொல்பொருட்கள் மீள கையளிப்பு

150 வருடங்களுக்கு மேலாக நெதர்லாந்தின் வசமிருந்த இலங்கைக்கு சொந்தமான 6 தொல்பொருட்கள் இன்று(29) மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரினால் உத்தியோகபூர்வ கையளிப்பு இடம்பெற்றது.

இன்று காலை 05.05 மணி அளவில் ஜேர்மன், பிராங்பேர்ட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-554 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தொல்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொல்பொருட்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஏற்றுக்கொண்டார்.

இந்த தொல்பொருட்களில் கிர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின் திருமண வாள், பீரங்கி மற்றும் 2 பெரிய துப்பாக்கிகள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர இங்கிலாந்து உட்பட சுமார் 20 வெளிநாடுகளில் இலங்கையில் இருந்து திருடப்பட்ட தொல்பொருட்கள் பெருமளவு இருப்பு உள்ளதுடன், இந்தப் பொருட்களும் எதிர்காலத்தில் இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles