நுவரெலியா பொலிஸாரும், நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின்போது மிருகங்களின் உடற்பாகங்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் இன்று (11.08.2020) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா அன்ட பேங்க் பகுதியில் அமைந்துள்ள தனியார் உல்லாச விடுதி ஒன்றில் மான் கொம்பு 18, பாம்பு தோள் ஒன்று, 15 பதப்படுத்தப்பட்ட வண்ணாத்து பூச்சிகள் அடங்கிய பெட்டிகள், இரண்டு காட்டெருமை கொம்புகள் ஆகியவை இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.இந்த உல்லாச விடுதியின் முகாமையாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் சட்டங்களுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விஜேசேகரவின் உத்தரவின் பேரில் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி வீரசிரி பொலிஸ் உத்தியோகஸ்தர்களான பிரியங்கர (66427) திமன்த (81604) தேசப்பிரிய (56545) ஆகியோரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்தே இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக நுவரெலியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு