1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டமூலத்துடன் தொடர்புடைய 2303/24 நியாயமற்ற வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் சபைகளால் வெளியிடப்பட்ட அறிக்கை

20, அக்டோபர் 2022 அன்று வெளியிடப்பட்ட 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டமூலத்துடன் தொடர்புடைய 2303/24 அசாதாரண வர்த்தமானி அறிவித்தலில், கப்பல் முகவர்கள், சரக்கு அனுப்புபவர்கள், கப்பல் அல்லாத பொது விநியோகத்தர்கள் மற்றும் கொள்கலன் சேவைகள் தொடர்பான உரிமச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது.

தற்போதுள்ள கட்டணக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் முழு கொள்கலன் சுமைகள் மற்றும் கொள்கலன் எடையை விட குறைவான இறக்குமதி ஏற்றுமதிகளுக்கு அதிகபட்ச விநியோகக் கட்டணங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ன. ஒரு கன மீட்டருக்கு 8 அமெரிக்க டொலர் செலவு மீட்பு கட்டணம் இறுதி இறக்குமதியாளரிடம் வசூலிக்கப்படுவதுடன், சலவைக் கட்டணம், பொருட்களை அகற்றும் கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணம் ஆகியவை செலவு மீட்பு கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF), தேசிய ஏற்றுமதி சபை, இலங்கை இறப்பர் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை ஏற்றுமதியாளர்கள் சபை, தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம், சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சங்கம் ஆகியவை இணைந்து, சந்தை அதிகாரக் கோட்பாடுகளை இந்த புதிய 2304/24 இலக்கம் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் மீறுவதாகவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. இந்த விதிகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரு துறைகளின் ஒட்டுமொத்த நிலைத்தன்மையையும் போட்டித்தன்மையையும் மோசமாக பாதிக்கிறது எனவும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த போட்டியற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற விதிமுறைகள் தொடர்பாக அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன:

1. விலை நிர்ணயத்தில் அதிகாரிகளின் தலையீட்டால் செலவுகள் அதிகரிக்கும்

2. சேவை வழங்குநர்கள் மற்றும் சேவை பெறுநர்கள் என தனியார் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புகளை நீக்கும்

3. சரக்கு மற்றும் பிற செலவுகள் தொடர்பான தவறான விளக்கம் ஏற்படும்

நாட்டின் பொருளாதாரத்திற்கு தொழில்துறை முக்கிய பங்களிப்பை வழங்குகிறது மற்றும் வர்த்தக சமநிலையை நிர்வகிக்க உதவுகிறது. 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தங்களை ஒழுங்குபடுத்தும் சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் உரிய பரிசீலனையை வழங்குமாறு வர்த்தக சம்மேளனங்களும் மற்றும் சங்கங்களும் கேட்டுக்கொள்கின்றன.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles