” 1996 இல் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டிருந்தோம். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பிரதி அமைச்சர் சந்திரசேகரனும் எம்முடன் வந்திருந்தார்.
தான் எடுத்து வந்த தேசிய அடையாள அட்டையை என்னிடம் காண்பித்தார்.
தோழரே, பாருங்கள், இதில் தனி சிங்கள மொழியில் மட்டும்தான் தகவல்கள் எழுதப்பட்டுள்ளன. என்னால் சிங்கள மொழி வாசிக்க முடியும். ஆனால் எனது பெற்றோரால் சிங்கள மொழியை எழுதவோ, வாசிக்கவோ முடியாது. அவர்களின் அடையாள அட்டையிலும் சிங்கள மொழி மட்டுமே உள்ளது என சந்திரசேகரன் சுட்டிக்காட்டினார்.
பாருங்கள், அவர்கள் உளரீதியாக எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார்கள். அரச கருமமொழி அமைச்சராக டியூ குணசேகர இருந்தார். அதன்பின்னர் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டது. மும்மொழியும் உள்வாங்கப்பட்டது.
தேசிய அடையாள அட்டை என்பது முக்கியத்துவம் மிக்கது. அதில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் நிச்சயம் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது கருத்து தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டையை மையப்படுத்தி ஊடகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே 96 இல் நடைபெற்ற மேற்படி சம்பவம் தொடர்பிலும் அமைச்சர் விவரித்தார்.










