இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு விரைவில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அத்துடன், அவர் வகித்த உள்ளாட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சு பதவி, ஆளுங்கட்சி எம்.பியொருவருக்கு வழங்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் 30 அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களையும், 40 இராஜாங்க அமைச்சர்களையும் நியமிக்கமுடியும். எனினும், இதுவரையில் 27 பேரே அமைச்சரவை அமைச்சு பதவிகளை வகிக்கின்றனர்.
இந்நிலையிலேயே சரத் வீரசேகர அமைச்சரவைக்கு உள்வாங்கப்படவுள்ளார். அதேபோல கம்பஹா மாவட்டத்தில் உள்ள மற்றுமொரு இராஜாங்க அமைச்சருக்கும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.
இதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு 20 இற்கு ஆதரவாக வாக்களித்த டயானா நியமிக்கப்படுவார்.
அதேவேளை, பஸில் ராஜபக்சவுக்காக எஞ்சிய அமைச்சு பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் அமைச்சு பதவி கையளிக்கப்படும்.