2ஆவது டெஸ்ட் போட்டியிலும் தென்னாபிரிக்கா முன்னிலை!

இலங்கை – தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் 2ஆவது போட்டியிலும் தென்னாபிரிக்க அணியின் ஆதிக்கம் தொடர்கின்றது.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 157 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

ஜொகன்னஸ்பேர்க் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

இருப்பினும் தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்களையும் இழந்து இலங்கை அணி 157 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக குசல் பெரேரா 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்து வீச்சில் அன்ரிச் நார்ட்ஜே 6 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலெடுத்தாடியதென்னாபிரிக்கா அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. 2ஆம் நாள் ஆட்டம் இன்றாகும்.

Related Articles

Latest Articles