2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று முன்வைக்கப்பட்ட நிலையில், இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று முதல் நடைபெறவுள்ளது.
பாதீடு தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு சபையில் இன்று அறிவிக்கப்படும். பொருளாதார நிபுணரான கலாநிதி ஹர்ஷ டி சில்வா விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுவார்.
இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்துக்கு 14 முதல் 21 வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, குழுநிலை விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, 2024 நியதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.