20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது கிரிக்கெட் வழக்கு

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமர்வில் இருந்து மற்றுமொரு நீதிபதி இன்று விலகினார்.

குறித்த மனு டி.என். சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது இந்த மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

இதன்படி, மனு விசாரணைக்கு புதிய நீதிபதிகள் குழு ஒன்றை பெயரிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்னவுக்கு உரிய மனு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விசாரணையில் இருந்து இதுவரை 3 நீதிபதிகள் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை (20) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles