“20 சிக்ஸர்கள்” இந்திய அணியை பந்தாடியது இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 2ஆவது ஒருநாள் போட்டி புனேயில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற  இங்கிலாந்து அணி தலைவர் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ஓட்டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 108 ஓட்டங்களையும், ரிஷப் பண்ட் 77 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் 337 என்ற  வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 43.3 ஓவர்களில் 337 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை எளிதாக வீழ்த்தியது.

ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்சின் அதிரடியான ஆட்டமே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாகும். அதிகபட்சமாக ஜேசன் ராய் 55, ஜானி பேர்ஸ்டோ 124, ஸ்டோக்ஸ் 99 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் மொத்த சிக்சர் எண்ணிக்கை 20 ஆகும். அதில் ஜானி பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் ஆகிய 2-பேரும் சேர்ந்து 17 சிக்சர்களை அடித்துள்ளனர். இந்திய அணி மொத்தமாகவே 17 சிக்சர்கள் மட்டுமே அடித்திருந்தது.

இந்நிலையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.

Related Articles

Latest Articles