200 இல் மலையகம் நிகழ்வில் 6 நூல்கள் வெளியிடப்படவுள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச உறவுகளுக்கான செயலாளர் H.H விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நாளை மறுதினம் 24 ஆம் திகதி மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள 200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி எனும் நிகழ்வில் மலையக மூத்த எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் சி.வி.வேலு பிள்ளையின் ‘மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும் ‘எனும் நூலும் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘தெளிவத்தை ஜோசப் கதைகள்’,சாரல் நாடனின் ‘ வானம் சிவந்த நாட்கள் ‘ எழுத்தாளர் மு.நித்தியாந்தனின் மலையக இலக்கியம் சிறுமை கண்டு பொங்குதல் மற்றும் மலையக ‘சுடர் மணிகள்’ , மாத்தளை வடிவேலனின் ‘வல்லமை தாராயோ’ மலரண்பனின் ‘கொலுஷா’ ஆகிய ஆறு நூல்களை வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்
மேலும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஸ்ணணின் ஊடாக வெளியிடப்படுவதாகவும் இந்நூல் வெளியிடுவதால் மூத்த எழுத்தாளர்களின் அவர்களின் படைப்பை வெளி உலகுக்கு எடுத்து காட்டும் நிகழ்வாகவும் இந்நிகழ்வும் அமையுமென மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச உறவுகளுக்கான செயலாளர் H.H விக்ரமசிங்க தெரிவித்தார்.
