200 லீற்றர் டீசல், 40 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது!

மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசேனபுர பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு எரிபொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில் 200 லீற்றர் டீசல் மற்றும் 40 லீற்றர் பெற்றோலுடனும் உரிமையாளரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர் 62 வயதான வியாபாரியாவர். சந்தேக நபர் அதிக விலையில் எரிபொருள் விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கமைய உலவாளி ஒருவரை பயன்படுத்தி எரிபொருள் பெற்றபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் வியாபார நிலையத்தை சோதனையிட்ட போது ஐந்து கலன்களில் இருந்து 200 லீற்றர் டீசல் இரண்டு கலன்களில் இருந்து 40 லீற்றர் பெற்றோல் என்பனவைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கிராந்துறுகோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

மெதிரிகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யு .ஏ.எல்.விதானகே தலைமையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles