2021 ஐ.பி.எல். தொடரில் 9 அணிகள்!

ஐ.பி.எல். தொடரில் 9ஆவது அணியை இணைப்பதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் இதில் பங்கேற்றன. 4ஆவது சீசனில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 8 ஆக குறைக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு போட்டியில் இருந்து தற்போது வரை 8 அணிகளே விளையாடி வருகின்றன.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2021) நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக ஒரு அணியை சேர்க்க கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2021 சீசனில் 9 அணிகள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு கிரிக்கெட் சபைக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காகவே அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் 9ஆவது அணியை சேர்க்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிக்காக வீரர்கள் அனைவரும் புதிதாக ஏலத்தில் விடப்படுவார்கள் என்று கிரிக்கெட் சபை தகவல் தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வீரர்களின் ஏலம் நடைபெறும். 9-வது அணி அகமதாபாத்தை மையமாக கொண்ட அணியாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles