2022 ஏப்ரலில் ஆட்சி மாற்றம்! ஆளுங்கட்சி எம்.பி. ஆருடம்!!

” நாட்டு நிலைமை மோசமாகவுள்ளது, அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஆருடம் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போது மிகவும் மோசமான சூழலே நிலவுகின்றது. மக்கள் மத்தியில் நெருக்கடியும், வன்முறையும் தலைதூக்கியுள்ளன. மக்களை அடக்கி அரசினால் தொடர்ந்தும் முன்னோக்கி செல்ல முடியாது. எனவே, எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத்தினுள் பாரிய ஆட்சி
கவிழ்ப்பொன்று இடம்பெறும். அவ்வாறு இல்லையேல் அரசுக்குள் அதிகார மாற்ற புரட்சி நிச்சயம் ஏற்படும்.” – என்றார்.

அதேவேளை, தற்போதைய அரசின் செயற்பாடுகளையும், பொருளாதாரத் திட்டங்களையும் அவர் கடுமையாக விளாசித்தள்ளியுள்ளார்.

Related Articles

Latest Articles