2023 இற்குள் 270 மில்லியன் கிலோ தேயிலை விளைச்சல் எதிர்பார்ப்பு

2023 இல்  270 மில்லியன் கிலோ தேயிலை விளைச்சல் எதிர்பார்க்கப்படுகின்றது என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களின் வருடாந்த மாநாடு இன்று  (16) கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர்,

” தேயிலை உற்பத்திக்காக வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.  அத்துடன், தேயிலை சபையால் வழங்கப்படும் நிதியின் ஊடாக தேயிலை தொழிற்துறையை மேலும் மேம்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2013ஆம் ஆண்டு அதிகளவான தேயிலை விளைச்சல் பெறப்பட்டது. அவ்வாண்டில் 340 மில்லியன் கிலோ விளைச்சல் பெறப்பட்டது.

2015 இல் இந்த நிலைமையை மீண்டும் அடைய முடிந்தது. அதன் பின்னர் படிப்படியாகக் குறைவடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 250 – 270 மில்லியன் கிலோ விளைச்சலைப் பெற முடிந்துள்ளது. இவ்வாண்டிலும் 270 மில்லியன் கிலோ விளைச்சலை எதிர்பார்க்கின்றோம்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles