2023 இல் சிறந்த வீரராக மெஸ்ஸி தெரிவு!

உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக ஆர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் 3 ஆவது முறையாக இந்த விருதை பெறுகிறார்.

இந்த விருதுக்காக நடந்த வாக்கெடுப்பில் மெஸ்ஸி அதிக புள்ளிகள் பெற்று விருதைத் தட்டிச் சென்றார். அவருக்கு அடுத்தபடியாக மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி வீரர் எர்லிங் ஹாலந்து சற்றே குறைந்த அளவில் புள்ளிகள் பெற்றார்.

ஸ்பெயின் கால்பந்து வீராங்கனை அய்டானா பான்மாட்டி, 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீராங்கனை விருதைத் தட்டிச் சென்றார். ஸ்பெயினுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றினார் அய்டானா.

Related Articles

Latest Articles