மின் கட்டண அதிகரிப்பை தவிர்க்க முடியாது. ஜனவரியில் நிச்சயம் மின் கட்டண அதிகரிப்பு இடம்பெறும் – என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மின்கட்டணத்தை அதிகரிக்காவிட்டால், மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படுமென இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
