2023 இல் 270 மில்லியன் கிலோ தேயிலை விளைச்சல் எதிர்பார்க்கப்படுகின்றது என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களின் வருடாந்த மாநாடு இன்று (16) கொழும்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
” தேயிலை உற்பத்திக்காக வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், தேயிலை சபையால் வழங்கப்படும் நிதியின் ஊடாக தேயிலை தொழிற்துறையை மேலும் மேம்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2013ஆம் ஆண்டு அதிகளவான தேயிலை விளைச்சல் பெறப்பட்டது. அவ்வாண்டில் 340 மில்லியன் கிலோ விளைச்சல் பெறப்பட்டது.
2015 இல் இந்த நிலைமையை மீண்டும் அடைய முடிந்தது. அதன் பின்னர் படிப்படியாகக் குறைவடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 250 – 270 மில்லியன் கிலோ விளைச்சலைப் பெற முடிந்துள்ளது. இவ்வாண்டிலும் 270 மில்லியன் கிலோ விளைச்சலை எதிர்பார்க்கின்றோம்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
