2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
தேசிய இணக்கப்பாட்டு அரசொன்றை ஸ்தாபிப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாக உள்ளது எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
