ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை 2024 ஜனவரி முற்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணியாள் தொகுதி பிரதானியுமான சாகல ரத்நாயக்க தேர்தல் பிரச்சார முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
அடுத்த வருடம் ஜுலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கிடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார பொறுப்பு மொட்டு கட்சியை சேர்த்த மூன்று அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.